Sunday, June 8, 2025
மடையர்
இலங்கைத் திறந்த பல்கலைக் கழக ACT4U என்னும் கழகத்தினால் அதன் நாவல வளாகத்தில் கடந்த மே மாதம் 19 ஆந்திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை (திங்கள் முதல் வெள்ளி வரை) நாடக விழா நடத்தப்பட்டது. போட்டி ரீதியாக நடத்தப்பட்ட நாடகங்கள் தினமும் மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை ;மேடையேறின. கொழும்பு டவர் மண்டபத்தில் நாடகத்தினை டிப்ளோமாக் கற்கை நெறிக்காக பயிலும் மாணவர் பலர் இந்த நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றிதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. பாரம்பரிய நாடகங்கள் ஃ கூத்துகள் என்பனவும் மேடையேறின.
நாடக விழாவின் நான்காம் நாளான வியாழக்கிழமையை ஏற்பாட்டாளர்கள் தமிழ் நாடகங்களுகக்காக ஒதுக்கியிருந்தனர். எனினும் தமிழ்ப் பார்வையாளரகள் மிகக் குறைவாகவே மண்டபத்தில் இருந்ததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இது ஒப்பனை, ஆடைகள், போக்குவரத்து போன்றவற்றுக்காக பெருமளவு செலவு செய்து இலங்கையின் நாலா புறமிருந்தும் தலைநகருக்கு வந்து இராவணேசன் கூத்தில் பங்குகொண்ட கலைஞர்களை ஏமாற்றமடைய செய்தததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. தமிழ் மொழி மூலமான சுவரொட்டிகள், பனர்கள், அழைப்பிதழ்கள், நுழைவுச் சீட்டுக்கள் தயாரிக்கப்படாமை இதற்காக காரணமெனலாம். அடுத்த வருடம் நாடக விழாவை ஒழுங்குபடுத்தும்போது ஏற்பாடாளர்கள் இதில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.
தமிழ் நாடகங்களுக்காக ஒதுக்கப்பட்ட வியாழக்கிழமை அன்று மடையர் ,இராவணேசன், ஒரு ஊருல.. ஆகிய மூன்று தமிழ் நாடகங்கள்; மேடையேறின. தமிழ் நாடகங்களுள் மடையர், ஒரு ஊருல.. ஆகியவை இரண்டு நடிகர்களை மட்டும் கொண்டு 30 நிமிடங்கள் நடத்தப்பட்ட நாடகங்களாகும். இவையிரண்டும் அரச நாடக விழாவில் விருதுகளைப் பெற்றவை. இராவணேசன் கூத்தானது பேராசியர் சி. மௌனகுரு அவர்களின் எழுத்துருவில் டவர் மண்டப யாழ்ப்பாண கற்கைப் பிரிவினால் மேடையேற்றப்பட்டது. இதில் நாடளாவிய ரீதியில் இருந்து நடிகர்கள் பங்கு கொண்டிருந்தனர்.
இவற்றுள் மடையர் என்னும் நாடகத்தினைப் பற்றி நோக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அரச நாடக விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்ற றுமேஸ் ரி சந்திரசிரி மற்றும் பாஸ்கர் கி~hன் ஆகியோர் நடித்த இந்த நாடகத்தினை இவர்கள் இருவருமே கூட்டாகத் தயாரித்தளித்தனர். திரைக்கதையை திரு. சுரேஸ் மது~hன் எழுதியிருந்தார். இவர்களுள் சிங்களவரான றுமேஸ் தமிழ் இளைஞனாக பாத்திரமேற்று சிறப்பாக நடித்திருந்தமை பாராட்டுக்குரியது. பாஸ்கர் கி~hனின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருந்தை குறிப்பிட வேண்டும்.
கொழும்பில் அறையொன்றில் வசிக்கும் யாழ்ப்பாண இளைஞனான சித்தாத்தினைத் ( றுமேஸ்) தேடி அவனது அறைவாசியான அருணின் (நாடகம் முழுதும் அருண் மேடையில் தோன்றவில்லை) மைத்துனன் ராஜ் ( பாஸ்கர் கிரி~hன்) யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறான். சித்தாத்தின் மேசையில் மடிக்கணணி ஒன்று காணப்படுகின்றது. சித்தாத் கணனியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறான். அறையில் பல சுலோக அட்டைகள் காணப்படுகின்றன. கொழும்ப்pல் வேலை விடயமாக அலுவலகமொன்றில் ஆவணமொன்றைக் கையளித்து விட்டு ஊருக்கு திரும்பிச் செல்வதே ராஜ் நோக்கம். கறுப்பு வேட்டியும் வெள்ளை ரீ- சேட்டும் அணிந்துள்ள சித்தாத் தலைமயிரை நீண்டதாக வளர்த்து குடும்பி கட்டியுள்ளார். இத்தோற்றம் சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற ‘கோட்டா கோ கோம்’ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பார்வையாளருக்கு நினைவூட்டத் தவறவில்லை. சித்தாத் வீட்டு உரிமையாளரான சிங்களவரை ( அவர் மேடையில் தோன்றவில்லை) அதட்டிக் கதைக்கிறார்.
அறைக்கு ராஜ் வரும்போது சித்தாத் தனது முன்னைய விபத்தில் தலையில் ஏற்பட்ட காயத்தினைக் காட்டுகிறார். தனது வீட்டில் இருந்து கொடுத்து விட்ட பலகாரங்களை ராஜ் சித்தாத்திடம் கொடுக்கிறார். அவற்றினை இரசித்துச் சாப்பிடும் சித்தாத் இப்படியான தரமான பலகாரங்களை கொழும்பில் வாங்க முடியாது என்கிறார். ராஜ் குளித்து உடை மாற்றியதன் பின்னர் இருவரும் சேர்ந்து உணவருந்துகின்றனர். பின்னர் இருவரும் பலதும் பத்தும் பேசுகின்றனர்.
அடுத்தநாள் ராஜின் அலுவல்கள் முடிந்ததன் பின்னர் அவனை கண் வைத்தியசாலைக்கு அருகில் இலங்கையின் வடபகுதியில் விகாரைகள் அமைப்பதற்கு எதிரான போராட்டம் நடக்கவிருப்பதாகவும் அதில் பங்கு கொள்ள வருமாறும் சித்தாத் அழைக்கிறான். தனது மடிக்கணணியில் போராட்டம் பற்றிய விபரங்களை சித்தாத்; ராஜ்க்கு காட்டுகிறான். முதலில் தயங்கிய ராஜ் பின்னர தான் அதில் கலந்து கொள்ளவில்லை எனத் தெளிவாகக் கூறுகிறான். அருண் கூட சித்தாத்துடன் தேவையில்லாமல் கதைக்க வேண்டாமெனக் சொன்னதாக ராஜ் கூறுகிறான்.
ராஜ் ஏதோ அலுவலாக வெளியே போகும்போது அவனுக்கு வரும் தொலைபேசி அழைப்பை எடுத்த சித்தாத்தின் முகம் கோபத்தில் சிவக்கின்றது. வாந்தி வருமாற் அருவருக்கிறான். ராஜின் பை, மற்றைய பொருட்களை எடுத்து நிலத்தில் வுhசலுக்கு கிட்டவாக அருவருப்புடன் வீசும்; சித்தாத் மஞ்சள் தூளைக் கரைத்து மாவிலையினால் அறை முழுதும் தெளிக்கிறான். இக்கட்டத்தில் சித்தாத்தாக நடிக்கு றுமேஸின் நடிப்பு மிகநன்றாக அமைகின்றது.
ராஜ் அறைக்கு திரும்பி வரும்போது தனது உடைமைகள் கீழே வீசப்பட்டிருப்பதனைக் கண்டு ஆச்சரியப்படுகிறான். அவன் ஏன் எறிந்ததென சித்தாத்திடம் வினவும்போது முதலில் பதிலளிக்காக சித்தாத் பின்னர் அவனை கீழ்ச் சாதியென திட்டுகிறான். “கீழ்ச்சாதியான தனது இரத்தம் தானே உனது உடலில் ஓடுகிறது” என ராஜ் சொல்கிறான். அதற்கு சித்தாத் தனக்கு விபத்தின்போது அருண் தான் இரத்தம் கொடுத்ததாகவும் கூறுகிறான். அதற்கு ராஜ் இரத்தம் போதாமையால் தானும் கொடுத்ததாக சொல்கிறான். “கீழ்ச் சாதியான நீ இரத்தம் கொடுக்காமல் என்னைச் சாக விட்டிருக்கலாம”; என அருவருத்தபடி சித்தாத் குறிப்பிடுகிறான். “அருண் கூட கீழ்ச் சாதி தானே அவனின் இரத்தமும் கூட உனது உடம்பில் ஓடுகின்றது” என ராஜ் சொல்கிறான்.
இருவருக்குமிடையே வாக்குவாதமேற்படுகின்றது. வாக்குவாதத்தில் ராஜ், உயர்சாதியெனச் சொல்லப்படுபவர்கள் தான் தேவையில்லாமல் போராட்டங்களில் ஈடுபட்டு நாட்டை அழித்ததாக கூறுகிறான். “பிரபாகரன் துரையப்பாவை சுட்டதற்கும் சாதிப்பிரச்சினைதான் காரணம்” எனக் ராஜ் கோபமாகக் குறிப்பிடுகிறான். வடக்கில் விகாரைகள் அமைப்பதற்கு எதிரான போராட்டம் அவசியமற்றது எனவும் ராஜ் சொல்கிறான்.
தனது உடைமைகளை தூக்கிக் கொண்டு அறையில் இருந்து வெளியேறும் ராஜினைக் கூப்பிட்டு அவன் மேசையில் விட்டுச் சென்ற ஆவணத்தினை சித்தாத் வழங்குவதுடன் நாடகம் நிறைவடைகின்றது.
“மடையர்” என்னும் இந்த நாடகத்தில் இரண்டு நடிகர்களினதுமே நடிப்பு நன்றாக அமைந்துள்ளது. முகபாவம், பாவனை, குரல் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. அவர்களுக்கு பாராட்டுகள். சிங்கள நடிகரான றுமேஜின் தமிழ் உரையாடல் சிறப்பாக அமைந்திருந்தது. இரண்டு இளம் நடிகர்களுக்கும் பாராட்டுக்கள்
ஆனால் நாடகத்தில் கருத்தியலில் மிக மோசமான தவறு காணப்படுகின்றது. மக்களின் காணிகளைப் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டங்களை கொச்சைப்படுத்தல், தேசிய விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றதற்கு தமிழரிடையே காணப்படும் சாதிப்பிரச்சினைதான் காரணம் என நிறுவ முயல்தல் போன்றன மோசமான கருத்துக்கள் ஆகும். உண்மையில் தமிழருக்கு சம உரிமை கிடைக்காமை, பல்கலைக் கழக அனுமதியில் தரப்படுத்தலால் தமிழ் மாணவர் உயர் கல்வி வாய்ப்புக்களை இழந்தமை, தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் போன்றவையே இலங.கையின் தேசிய இனப்பிரச்சினையின் தோற்றுவாயென பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த நாடகமானது தேசிய இனப்பிரச்சினையை கொச்சைப்படுத்தும் முகமாக தமிழரின் சாதிப்பிரச்சினையே தேசிய இனப்பிரச்சினைக்கு காரணம் என குறிப்பிடுவது அபத்தம்.
மொத்தத்தில் எடுத்துநோக்கும்போது சிறந்த நடிப்பாளுமை மிக்க நடிகர்களைக் கொண்டு தவறான கருததைத்; திணிக்கும் முயற்சியாகவே ;மடையர்’ என்னும் இந்த நாடகத்தினை நோக்க வேண்டியுள்ளது.
பேராசிரியர் தேவராசா முகுந்தன்
Subscribe to:
Posts (Atom)