Wednesday, May 31, 2023
பரியோவான் பொழுதுகள்
ஜுட் பிரகாஷpன் பரி. யோவான் பொழுதுகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நீண்ட கல்விப் பாரம்பரியமொன்றுள்ளது. இப்பாரம்பரியத்தை உருவாக்கியதில் காலணித்துவ அரசாங்சாங்களின் பங்களிப்பை மறைக்க முடியாது. 1823 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிரத்தானிய அங்கலிக்கன் மிசனறியினரால் உருவாக்கப்பட்ட பரி. யோவான் கல்லூரி இவ்வாண்டு தனது இரட்டை நூற்றாண்டைக் கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு இக்கல்லூரியின் பழைய மாணவராகிய ஜுட் பிரகாஷ; அவர்கள் கல்லூரி தொடர்பான தனது நினைவுகளை தொகுத்து ' பரி. யோவான் பொழுதுகள்' என்ற பெயரில் நூலொன்றினை வெளியிட்டுள்ளார். ஜுட் இணையத்தில் தொடராக எழுதிய கட்டுரைகளில் பரி. யோவான் கல்லூரி தொடர்பான பதிவுகளையே இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
ஜுட் பிரகாஷpன் எழுத்து நடை வாசகளை ஈர்க்கும் திறன் கொண்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் வரும் வாக்கியங்கள் பேச்சு மொழியிலும் பல இடங்களில் அமைகின்றன. எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் பாசையில் கூறுவதானால் இந்த நூலில் ஜுட் உண்மைகளை புனைவில் தோய்த்து எழுதியுள்ளார். தமிழகத்து எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், ஈழத்து எழுத்தாளர் எஸ். பொ. எழுதிய ' நடைவிடை தோய்தல்' அ. முத்துலிங்கம் எழுதிய 'உண்மை கலந்த நாட்குறிப்பு' பரி. யோவான் கல்லூரியின் மற்றொரு பழைய மாணவராகிய தற்போது கனடாவில் வாழ்ந்துவரும் ப. ஸ்ரீஸ்கந்தன் எழுதிய ' மனசுலாவிய வானம்' போன்ற நூல்களின் வரிசையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய நூலிது.
இந்த நூல் ஐந்து பகுதிகளாக பின்வரும் தலைப்புகளில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
1. கல்லூரி நினைவுகள்
2. கிரிக்கெட் நினைவுகள்
3. ஆசிரியர்களின் நினைவுகள
4. நினைவில் நிலைத்தவர்கள்
கல்லூரி நினைவுகள் என்னும் பகுதியில் பத்துக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. Jonian யாரென்றால் என்ற தலைப்பில்வரும் கட்டுரையில் பரி.யொவான் மாணவர்களின் பண்புகளை விபரிக்கிறார் ஆசிரியர். இவற்றின் பல பண்புகள் அவர்களிடம் காணப்படுகின்றதோ இல்லையோ என என்னால் குறிப்பிட முடியாவிட்டாலும் பரி. யோவான் ஆட்கள் கொஞ்சம் எடுவையான ஆட்கள், புளுகர்கள் போன்ற போன்ற விடயங்களை அவர்களுடன் நெருங்கிப் பழகிய எவரும் மறுக்க மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை.
பரி. யோவானில் ஈபிக்காரர்கள் என்ற கட்டுரை 1989 ஆம் அண்டு புனிதமான கல்லூரி வளாகத்தினுள் துப்பாக்கிகளுடன் நுழைந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் அட்டகாசம் விபரிக்கப்படுகின்றது. தற்போது தம்மை ஜனநாயகவாதிகளாகக் காட்டிக் கொள்ளும் இவர்கள் இந்தச் சம்பவத்திற்கு மட்டுமல்லாது இந்த நூலில் வேறு இடங்களில் குறிப்பிடப்படும் கிரிக்கெட் அணித்தலைவர் தி. அகிலன், கல்வியில் சிறந்த மாணவன் அறிவாளி போன்றோரின் கொலைகளுக்கும் பரி. யோவான் கல்விச் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அவற்றுக்கான ஆவணமாக இந்த நூல் விளங்குகின்றது. இதனையொத்த நிகழ்வு 1988 ஆம் ஆண்டு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி விடுதியிலும் இடம்பெற்றது. அதன்போது சில துறவிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எனப் பலரும்கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டமை நினைவுக்கு வருகின்றது.
1986 இல் ஒருநாள் என்ற கட்டுரை சுவாரசியமாக நகர்கின்றது. இக்கட்டுரையில் நூலாசிரியர் 1986 ஆம் ஆண்டுதான் புசயனந 7 ஊ வகுப்பில் கற்றதாக குறிப்பிடுவது தவறாக அமைகின்றது. 1986 இல் நூலாசிரியர் புசயனந 8 இல் இருந்திருக்க வேண்டும். அல்லது அவர் 1985 இல் அவர் புசயனந 7 இல் இருந்திருக்க வேண்டும். மூன்று தசாப்த்தங்களின் பின்னர் பழைய நினைவுகளை மீட்டெழுதும்போது இவ்வாறான சிறுவழுக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
பரி. யோவானில் கல்வியிலும் விளையாட்டக்களிலும் சிறந்து விளங்கிய சதீசனைப் பற்றிய கட்டுரை எதிர்காலச் சந்ததியினருக்கு வழிகாட்டக் கூடியது. எப்படி கல்வி, விளையாட்டு என்பவற்றுக்கு சம முக்கியத்துவமளித்து வாழ்வில் முன்னேற முடியுமென்பதற்கு சதீசன் சிறந்த உதாரணம் எனலாம். சதீசனிடம் பல பரி. யோவான் மாணவர்களிடம் காணப்படாத எடுவையற்ற இயல்பாக பழகக் கூடிய தன்மை என்னைக் கவர்ந்த அம்சமெனலாம்.
யுசவ சுழழஅ கொடுமைகள் என்ற கட்டுரையில் ஆசிரியர் தேவராஜனின் இரண்டு பக்கங்களும் காட்டப்பட்டுள்ளன. அவரைப் பற்றிய பதிவுகளை சற்று மென்மைப்படுத்தியிருக்கலாம். அவரைப் பற்றிய கசப்பான பல நினைவுகளை நூலாசிரியர் தவிர்த்திருக்கலாமோவென எண்ணத் தோன்றுகின்றது.
இந்த நூலில் உள்ள அடுத்த பகுயான கிரிக்கெட் நினைவுகளில் முதலில் இடம்பெறும் கனவான கனவு என்ற கட்டுரையில் வரும் சதானந்தன், இன்பசோதி போன்ற புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் இக்கட்டுரையாளரின் சகவகுப்பு மாணவர்கள். கனவு சுகமாக இருக்கின்றது.
வடக்கின் பெரும்போரென வர்ணி;க்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் பரி. யோவான் கல்லூரிக்கும் இடையில் நூற்றாண்டைக் கடந்து வருடாந்தம் நடைபெறும் கிரிக்கெட் போட்டி பற்றிய விபரணத்திற்கான நூலாசிரியர் தனது நேரத்தை செலவளித்து பழைய வீரர்கள், ஆதரவாளர்கள் என பலரியடம் தகவல்களை சேகரித்துள்ளார். இது பாராட்டக்குரியது.
1980 ஆம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரிக்கும் யாழ் பரி. யோவான் கல்லூரிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டி பற்றி கட்டுரையில் நூலாசிரியர் விறுவிறுப்புக்கென வலிந்து சேர்த்த சில விடய்ஙகள் வாசகனை குழப்புகின்றது.
உதைபந்தாட்ட நினைவுகளைக் சுமர்ந்துவரும் பண்டிதர் கோப்பையை பரி. யோவான் கல்லூரி வென்ற கதையைத் சேர்த்திருப்பது கிரிக்கெட் பகுதிக்குள் பொருத்தமற்றதாக அமைகின்றது. அக்கட்டுரையை வேறொரு தலைப்பின் கீழ் உள்ளடக்குதல் பொருத்தமாக அமையும்.
இலங்கைக் கிரிக்கெட் அணியும் ஜொனியன்ஸிம் என்ற கட்டுரையில் சிறுபான்மை இனத்தவர்கள் என்ற காரணத்திற்கான இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்ட பரி. யோவான் மாணவர்களை மட்டுமல்லாது யாழ்ப்பாணத்திலுள்ள மற்றைய கல்லூரிகளின் மாணவர்களைப் பற்றியும் விபரிக்கின்றது. இக்கடடுரையின் தலைப்பை இலங்கைக் கிரிக்கெட் அணியும் யாழ்பாண வீரர்களும் என்ற பொருள்பட மாற்றுவது பொருத்தமாக அமையும்.
ஆசிரியர்களின் நினைவுகள் என்ற பகுதியல் நூலாசிரியர் தனது ஆசிரியர்களைப் பற்றி விபரிக்கிறார். செ. கதிர்காமத்தம்பி அசிரியரைப் பற்றிய கட்டுரையில் அவரது பட்டப் பெயரை பூடகமாகத் குறிப்பிடுவதை தவிர்த்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகின்றது.
வேட்டி, சால்வை அணிந்து கம்பீரமாக கல்லூரிக்கு வரும் ஜீவானந்தம் ஆசிரிரைப் பற்றிய கட்டுரை சிறப்பாக வந்திருந்தாலும் அவரது ஆங்கில அறிவு பற்றிய மாணவரது நையாண்டிக் கதைகளை எழுத்தில் பதிவு செய்தது தவறென்றே எண்ணத் தோன்றுகின்றது. ஒரு தசாப்த்தத்தனை நினைவுக் கொண்டு வரும் சிறந்த ஆவணமாக அமையக் கூடிய இந்நூலினை வாசிக்கும் ஜீவானந்தம் ஆசிரியரின் சந்ததியினர் மனம் வருந்தக் கூடும். எனவே இந்த நூலில் நூலாசிரியர் அடிக்கடி பெருமையாகக் குறிப்பிடும் பரி. யோவான் பண்புகளுக்கமைய இந்த நூலின் அடுத்த பதிப்பொன்று வெளிவருமாயின் இந்த நையாண்டிகள் தவிர்க்கப்படல் அவசியமானது.
இந்நூலின் இறுதிப் பகுதியாக அமையும் 1992 நினைவுகள் என்ற பகுதியில் வரும் சேரலாதனைப் பற்றிய பதிவுகள் முன்னுரையில் ஆசியர் செ. கதிர்காமத்தம்பி அவர்கள் குறிப்பிடுவதைப் போல ஒரு சிறுகதையைப் போல அமைகின்றது. இக்கட்டுரையில் நூலாசிரியர், சேரலாதன் நண்பர்களிடம் காசு சேர்தது சோடா வாங்கி நூறு ஓட்டங்களை எடுத்த வீரனுக்கு கொடுப்பதற்கு மைதானத்திற்கு ஓடியதையும் பிற்காலத்தில் அவன் ஈழ விடுதலைப் பொராட்டத்தில் ஈடுபட மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து காசு அனுப்பியதையும் தொடர்புபடுத்து எழுதியிருப்பது பொருத்தமற்றதாகவேபடுகின்றது.
1992 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவில் சிரேஷ;ர மாணவ தலைவனாக விளங்கிய சபேசனைப் பற்றிய பதிவுகள் இந்த நூலில் எங்கும் காண முடியவில்லை.
மேலும் நூலின் ஓரிடத்தில் நூலாசிரியர் பரி. யோவானில் Batch என்றால்
1992 எனக் குறிப்பிடுவதை 1992 கல்லூரி கிரிக்கெட் அணிக்கு 1992 உயர்தரப் பிரிவு மாணவர்கள் எவரும் தலைமை தாங்காமல் 1993 உயரதரப் பிரிவைச் சேர்ந்த ம. காண்டீபன் தலைமை தாங்கியது கேள்விக்குள்ளாக்குகின்றது. 1992 கிரிக்கெட் அணிகளுக்கு புனித பத்திரியார் கல்லூரி கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி என்பவற்றிலும் 1993 உயர்தர பிரிவுகளைச் சேர்ந்த ஏபன், வீரசுதன் ஆகியோர் தலைமையேற்றது நினைவுக்கு வருகின்றது.
'குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல'
போன்றவற்றை நன்னூலார் இலக்கணக் குற்றமாக் குறிப்பிடுகிறார். இந்த நூலில் பல விடயங்கள் திரும்பத்திரும்ப கூறப்படுவதானது வாசகனை சலிப்படையச் செய்கின்றது என்று சொல்லத் தோன்றுகின்றது. உதாரணமாக இந்த நூலில் சிவகுமரனைப் ( சேரலாதன்) பற்றிய விடயங்கள் பல கட்டுரைகளில் பரவியுள்ளன. தனித்தனிக் கட்டுரைகளை நூலாக்கும்போது இவ்வாறான குற்றங்கள் இடம்பெறக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே அடுத்த பதிப்பில் இந்த கூறியது கூறலை தவிர்க நூலாசிரியர் முயற்சிப்பாரென நம்புகிறேன்.
ஒட்டுமொத்தமாக எடுத்து நோக்கும்போது இந்த நூலானது 1980 களின் யாழ்ப்பாண சூழலை முன்வைப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லத் தோன்றுகின்றது. எனது அண்மைய முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளதைப் போல நூலின் விலை மிக அதிகம். நூலினை மலிவுப் பதிப்பாக வெளியிட்டு பல வாசகர்களை சென்றடைய வழிசமைக்க அவுஸ்ரேலியாவில் கணக்காளராக பணியாற்றும் ஜுட் பிரகாஷ; முன்வருவார் என்பது எனது நம்பிக்கை.
- தேவமுகுந்தன்
Subscribe to:
Posts (Atom)
